உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் சஞ்சீவ் கன்னா

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் சஞ்சீவ் கன்னா

1 mins read
f24e4164-2fab-4606-84d7-c271997cd5bd
சஞ்சீவ் கன்னா. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை (படம்) நியமித்து அதிபர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக அடுத்த மாதம் 11ஆம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள திரு சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அதனால் தற்போது புதிய தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்