மகாரா‌ஷ்டிரா துணை முதல்வர் உயிரிழந்த விபத்து; விசாரணை குறித்து அதிருப்தி

மகாரா‌ஷ்டிரா துணை முதல்வர் உயிரிழந்த விபத்து; விசாரணை குறித்து அதிருப்தி

2 mins read
61756f9f-513a-417f-bd45-04020f77bf9a
விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மந்தமாவதாக மத்தியப் புலனாய்வு அலுவலம் சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புனே: மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமான விபத்து தொடர்பான விசாரணை மந்தமடைந்துள்ளதாக மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் குறைகூறியுள்ளார்.

இந்நிலையில், அவர் மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) அலுவலகத்தைப் பூட்டச் சென்றது அங்குச் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 28ல் பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் பயணம் செய்த தனி விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தைப் பெரும் சக்தி ஒன்று பாதுகாத்து வருவதாகவும் ரோஹித் பவார் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இது தொடர்பாக மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடத்திவரும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படி அவர் கோரியுள்ளார்.

மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை அவர் வலியுறுத்தியிருந்தார்.

நான்கு மாதங்களாகியும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படாததால் ஆத்திரமடைந்த திரு ரோஹித் பவார், வெள்ளிக்கிழமை காலை புனேயில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்குச் சங்கிலி, பூட்டு ஆகியவற்றுடன் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அலுவலகத்தைப் பூட்டிவிட்டால் இந்த வீண் செலவாவது குறையும் எனக் கடிந்துரைத்தார்.

ஒரு காலத்தில் அனைத்துலக அளவில் மதிக்கப்பட்ட சிஐடி அமைப்பு, தற்போது சரிவரச் செயல்படவில்லை என்றார் திரு ரோஹித்.

“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்கூட வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டன. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் பலமுறை முயன்றும் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படவில்லை,” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

குறிப்புச் சொற்கள்
விமானம்விமான விபத்துசிபிஐஅலுவலகம்