டோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி காவல்துறை

டோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி காவல்துறை

1 mins read
78a863d3-ac30-4a01-923b-da93b130c189
மகிந்திர சிங் டோனி. - படம்: IANS
Google News Preferred Icon

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு ராஞ்சி காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியின் சிமாலியா பகுதியில் டோனியின் வீடு அமைந்துள்ளது. ராஞ்சியில் இருக்கும் நாள்களில் டோனி வெளியே செல்லும்போது அவரே கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், அண்மையில் தமது வீட்டின் அருகில் வேக வரம்பை மீறி டோனி காரை ஓட்டிச் சென்றது காவல்துறையின் தானியங்கி கேமராவில் பதிவாகியது.

இதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
டோனிஅபராதம்போக்குவரத்து

தொடர்புடைய செய்திகள்