எதிர்க்கட்சி இல்லாத புதுவைச் சட்டமன்றம்

எதிர்க்கட்சி இல்லாத புதுவைச் சட்டமன்றம்

1 mins read
74aa0cd4-0e26-4493-b121-864f46471355
புதுவை சட்டமன்றம். - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

புதுச்சேரி: வரலாற்றில் முதல் முறையாகப் புதுவைச் சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் எதிர்க்கட்சி என்ற தகுதி கிடைக்கவில்லை.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி புதுவையில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 18 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக ஆகிய கட்சிகள் தரப்புக்கு ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், ரங்கசாமி மீண்டும் முதல்வராகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் திமுக 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

தவெக 2, அதன் கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. மூன்று இடங்களில் சுயேச்சைகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

புதுவை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தகுதி பெறுவதற்கு ஆறு தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். சட்டமன்றத்தில் உள்ள இடங்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், எந்தக் கட்சிக்கும் அத்தகைய தகுதி கிடைக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்