இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள நெகிழிப் பணம்

இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள நெகிழிப் பணம்

1 mins read
கள்ளப்பணப் புழக்கத்தை ஒடுக்க புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
bbe33cb1-0572-4acb-9851-2f9b84459075
இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கள்ளப் பணங்களைத் தவிர்க்கவும் பல புதிய அம்சங்களை இந்திய மத்திய வங்கி படிப்படியாகப் புகுத்தவுள்ளது.  - படம்: ஐபிஎன்எஸ்
Google News Preferred Icon

மின்னிலக்கப் பரிவர்த்தனைகள் பெருகினாலும், இந்தியாவில் காகிதப் பணங்களுக்கான தேவை அதிகமாகவே உள்ளது.

இதனால், நெகிழிப் பணங்களைப் புழக்கத்தில்விட அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும், ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவினம் அதிகரித்து வருவதும் இம்முடிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

காகிதப் பணங்களை அச்சிடுவதற்கான செலவினம், கடந்த 2024 நிதியாண்டில் 5,101.4 கோடி ரூபாயிலிருந்து, 2025 நிதியாண்டில் 6,372.8 கோடி ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அவை விரைவில் சேதமடைவதால், கடந்த ஆண்டில் மட்டும் 23.8 பில்லியன் காகிதப் பணத்தை அந்நாட்டு மத்திய வங்கி அழித்தது. இது முந்தைய ஆண்டைவிட 12.3 விழுக்காடு அதிகமாகும். அதில் பெரும்பாலானவை 100, 500 ரூபாய் தாள்களாகும்.

இதற்கிடையே, இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கள்ளப் பணங்களைத் தவிர்க்கவும் பல புதிய அம்சங்களை இந்திய மத்திய வங்கி படிப்படியாகப் புகுத்தவுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் இறுதியில், புழக்கத்திலிருந்த காகிதப் பணத்தின் பெறுமானம் 11.9 விழுக்காடு உயர்ந்து, 41.2 லட்சம் கோடி ரூபாயாக மேலோங்கியது.

மின்னிலக்கப் பரிவர்த்தனைகள் வளர்ந்தாலும், தனிநபர்கள் ரொக்கப் பணத்தையே அதிகம் பயன்படுத்துவது இதனால் தெளிவாகிறது.

குறிப்புச் சொற்கள்
கள்ளப்பணம்பாதுகாப்புநெகிழிபணம்