நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் காணொளிகள்; தயாரிப்பாளர் கைது

நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் காணொளிகள்; தயாரிப்பாளர் கைது

1 mins read
fd93747e-b590-49a6-b8b9-a71bb6a0a95b
டாப் ரியல் டீம் என்ற அந்த ஒளிவழியில் திகைப்பூட்டும் சர்ச்சைமிகு தலைப்புகளையும் வசனங்களையும் கொண்டுள்ள காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுவதால் அந்த ஒளிவழி பிரபலமாகி வருவதாகக் கூறப்படுகிறது. - படம்: யூடியுப்
multi-img1 of 2
Google News Preferred Icon

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஆமிர், தனது ஒளிவழியில் பிறர் மனத்தைப் புண்படுத்தும்படியான, தவறான தகவல்கள் உள்ள காணொளிகளைப் பதிவேற்றியதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார். 

5.83 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆமிரின் ஒளிவழியைப் பின்தொடர்கின்றனர்.

ஆமிரின் ஒளிவழியிலுள்ள படைப்புகளில் ஆபாசச் சொற்களும் தவறான தகவல்களும் இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர், கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

டாப் ரியல் டீம் என்ற அந்த ஒளிவழியில் திகைப்பூட்டும் சர்ச்சைமிகு தலைப்புகளையும் வசனங்களையும் கொண்டுள்ள காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுவதால் அந்த ஒளிவழி பிரபலமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

சமூக நல்லிணக்கச் சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக ஆமிர் பல்வேறு வன்மமிகு காணொளிகளைத் தாயரித்ததாகக் காவல்துறையின் சமூக ஊடகக் குழு ஆய்வுக்குப் பின் முடிவு செய்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்