பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்: கொண்டாடிய பெற்றோர்

பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்: கொண்டாடிய பெற்றோர்

1 mins read
761c87d9-2b52-47ea-8e40-d87d747ab690
முகமது சையது. - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

மும்பை: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் மாணவர் ஒருவர் 55% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதை அவரது பெற்றோர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

மும்பையைச் சேர்ந்த வாசிம் பட்டேல் என்பவரின் மகனான முகமது சையது, அண்மையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். சராசரியாக 55 விழுக்காடு மதிப்பெண்களுடன் அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட கோபப்படும் பெற்றோர் மத்தியில், மகன் முகமது சையது தேர்வில் தேர்ச்சி பெற்றது தமக்குப் போதும் என்று கூறியுள்ளார் வாசிம் பட்டேல்.

அது மட்டுமல்ல, மகன் தேர்வில் தேர்ச்சி பெற்றதைக் கொண்டாடும் வகையில், பெரிய கேக் வாங்கி வந்து, அதை வெட்டச் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட காணொளி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தன் மகனின் மனம் காயப்பட்டுவிடக் கூடாது என்பதே முக்கியம் என்றும் மகன் பெற்ற 55% மதிப்பெண் தன்னைப் பொறுத்தவரை 85 விழுக்காடுக்கு இணையானது என்றும் வாசிம் பட்டேல் கூறியுள்ளார்.

இவரது காணொளியைக் கண்ட மாணவர் ஒருவர், தாம் 10ஆம் வகுப்பில் 95 விழுக்காடும் 12ஆம் வகுப்பில் 94.8 விழுக்காடு மதிப்பெண்ணும் எடுத்தும்கூட தமக்கு இப்படியோர் கொண்டாட்டம் அமையவில்லை என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்