ஏப்ரல் 10 முதல் சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனை இல்லை: இந்தியா

ஏப்ரல் 10 முதல் சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனை இல்லை: இந்தியா

2 mins read
07529d57-6bca-4bd2-80b9-5d126f3fa35c
இந்தியாவின் சுங்கச் சாவடிகளில் வருடாந்தர ‘ஃபாஸ்ட்டேக்’ முறையைப் பயன்படுத்தும்படி போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியச் சாலையின் சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ரொக்கப் பரிவார்த்தனைகள் அனுமதிக்கப்படமாட்டா.

சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்க புதிய நடைமுறையை இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளிலும் விரைவுச்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வரிச் சலுகை அட்டைகளைக் காட்டும் நடைமுறையைப் போக்குவரத்து அமைச்சு நீக்கத் திட்டமிட்டுள்ளது.

மாறாக, ‘விலக்களிக்கப்பட்ட ஃபாஸ்ட்டேக்ஸ்’ (Exempted FASTags) கட்டண முறை அல்லது வருடாந்தர ‘ஃபாஸ்ட்டேக்’ (FASTag) முறையைப் பயன்படுத்தும்படி சம்பந்தப்பட்ட அரசாங்கத் தரப்புகளிடமும் அதிகாரிகளிடமும் அமைச்சு பேசவிருக்கிறது.

கார்களுக்கான ‘ஃபாஸ்ட்டேக்’ (FASTag) உரிமத்துக்கு ஓராண்டுக் கட்டணம் 3,075 ரூபாய். அதன் மூலம் 200 சுங்கச் சாவடிகளைக் கடந்துசெல்ல முடியும்.

சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டுநர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான சச்சரவுகளையும் ‘ஃபாஸ்ட்டேக்’ நடைமுறை மூலம் தவிர்க்க முடியும் என்று போக்குவரத்து அமைச்சு நம்புகிறது.

‘ஃபாஸ்ட்டேக்’ உரிமம் இல்லாத வாகனங்களின் ஓட்டுநர்கள் சுங்க வரிக் கட்டணங்களை யுபிஐ (UPI) மூலம் செலுத்த முடியும். அது வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு அதிகமான இருக்கும். யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தத் தவறும் ஓட்டுநர்களுக்குச் சுங்கச் சாவடிகளைக் கடந்துசெல்ல அனுமதி மறுக்கப்படலாம் அல்லது வாகனங்களிலிருந்து நீக்கப்படலாம்.

விரைவுச்சாலை அதிகாரிகள் செலுத்தவேண்டிய சுங்க வரிக் கட்டணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம். மூன்று நாள்களுக்குக் கட்டணத்தைச் செலுத்த தவறுவோரின் கட்டணங்கள் இரட்டிப்பாகும்.

அரசாங்க வாகனங்களுக்குதான் சுங்க வரிச் சலுகைகள் உள்ளதே தவிர தனிப்பட்ட வாகனங்களில் பயணம் செய்யும் அரசாங்கத் துறை ஊழியர்களுக்கு அல்ல என்று அமைச்சு வலியுறுத்தியது.

அப்படியிருந்தும், சுங்க வரி செலுத்துவதைத் தவிர்க்க தனியார் வாகனங்களில் செல்வோர் அரசாங்க அடையாள அட்டைகளைச் சுங்கச் சாவடிகளில் காட்டுவதால் சச்சரவுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ‘ஃபாஸ்ட்டேக்’ உரிமம் இல்லாத வாகனங்களுக்குச் செலுத்தப்படாத சுங்க வரி குறித்து மின் அறிக்கைகள் அனுப்பப்படும்.

குறிப்புச் சொற்கள்
சாலைபோக்குவரத்துசுங்கச் சாவடிசுங்கவரி