‘சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்’ (சிஃபாஸ்) இந்திய நடனம், இசை, கலாசாரத்தைப் பாதுகாக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகில் பல்வேறு அமைப்புகள் இதுபோன்று செயல்பட்டுவரும் நிலையில், சிங்கப்பூர் அமைப்பு தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“இந்த நிகழ்வோடு தொடர்புடைய நிகழ்ச்சியில், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த அமைப்பின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்தக் குழுவிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனப் பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளார்.

