கர்நாடகா: கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

கர்நாடகா: கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

1 mins read
2036ff59-2fce-4fea-ac23-b7ac13e0e2e4
ஹுப்ளி சிவன் கோயிலில் எரிவாயு வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களில் டிசம்பர் 31ஆம் தேதி பிரகாஷ் பார்கர் என்பவர் உயிரிழந்துவிட்டார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ஹுப்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் வந்து தங்கி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த டிசம்பர். 23ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 ஐயப்பப் பக்தர்களும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால், கடந்த டிச. 26ஆம் தேதி நிஜலிங்கப்பா பேரூர் (வயது-58), சஞ்சய் சவ்டட்டி (17) மற்றும் ராஜூ முகேரி (16) மற்றும் லிங்கராஜ் பிர்நூர் (21) ஆகியோரும், டிச.29 அன்று ஷங்கர் சவுகான் (30) மற்றும் மஞ்சுநாத் வாக்மொடே (17) ஆகியோரும் கடந்த டிச.30 அன்று தேஜஸ் சதாரே (26) என்பவர் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி பிரகாஷ் பார்கர் என்பவர் உயிரிழந்தார். இதனால் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஐயப்பப் பக்தர்களின் எண்ணிக்கை மொத்தம் 8 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, பலியான ஐயப்பப் பக்தர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்