மேற்கு வங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு; 12 வழக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு; 12 வழக்குகள் பதிவு

2 mins read
28158145-997f-446f-ad98-a0fcc3b52e70
அரசமைப்​புச் சட்​டத்​தின்கீழ், வழங்​கப்​பட்​டுள்ள அதி​காரத்​தைப் பயன்​படுத்தி இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். - கோப்புப் படம்: தி ஸ்டேட்ஸ்மேன்
Google News Preferred Icon

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் ஏழு நீதித்துறை அதிகாரிகள் சமூக விரோதக் கும்பலால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வுப் பிரிவு 12 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

அண்மையில் வாக்​காளர் பட்​டியல் சிறப்புத் தீவிரத் திருத்​தப் பணிக்​காக (எஸ்​ஐஆர்) உச்​ச நீதி​மன்ற அறிவுறுத்​தலின்​படி பல்வேறு மாநிலங்​களில் இருந்து நீதித்​துறை அதிகாரி​கள் பலர் மேற்கு வங்கத்துக்கு அனுப்பிவைக்​கப்​பட்​டனர்.

இந்நிலையில், கடந்த ஏப்​ரல் 1ஆம் தேதி, மால்டா மாவட்​டத்​தில் உள்ள காலி​யாசக், மோதாபரி பகு​தி​களில் அந்த நீதித்துறை அதிகாரிகள் பணியில் ஈடு​பட்​டிருந்தனர்.

அப்போது, அங்கு திடீரென கூடிய சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த சிலர், ஏழு நீதித்​துறை அதி​காரி​களைச் சுற்றி வளைத்துச் சிறைபிடித்தனர். அவர்களில் மூன்று பெண் அதிகாரிகளும் அடங்குவர். மேலும், ஐந்து வயதுக் குழந்தையும் சிறைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களுக்கு உணவு, குடிநீர் என்று எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மேற்கு வங்க அரசின் செயல்​பாடு​களைக் கடுமை​யாகச் சாடியது.

அரசமைப்​புச் சட்​டத்​தின்கீழ் வழங்​கப்​பட்​டுள்ள அதி​காரத்​தைப் பயன்​படுத்தி இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு மாற்றுவதாகவும் தெரிவித்தது.

இந்நிலை​யில், புலனாய்வுப் பிரிவு வெளி​யிட்​ட அறிக்​கை​யில், நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்