இண்டிகோ டிஆர் சிறிய ரக விமானச் சேவைகளை நிறுத்துகிறது

இண்டிகோ டிஆர் சிறிய ரக விமானச் சேவைகளை நிறுத்துகிறது

2 mins read
2b798a91-058b-4f44-8398-fb330c7cb697
இண்டிகோ விமானம். - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு தினமும் இயக்கப்பட்டு வந்த ஏடிஆர் (ATR) சிறிய ரக விமானச் சேவைகள் செவ்வாய் (டிசம்பர் 16) முதல் நிறுத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை - திருச்சி இடையே தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, இருமார்க்கங்களிலும் சேர்த்து மொத்தம் 12 முறை ஏடிஆர் சிறிய ரக விமானச் சேவைகளை இண்டிகோ நிறுவனம் வழங்கி வந்தது.

இதுபோல சென்னை - மதுரை இடையே இருமார்க்கங்களிலும் சேர்த்து 16 முறை ஏடிஆர் சிறிய ரக விமானச் சேவைகள் இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், மதுரை, திருச்சிக்கான 78 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் சிறிய ரக விமானச் சேவைகள் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்குப் பதிலாக செவ்வாய் முதல் திருச்சி, மதுரைக்கு ‘ஏ20N’ (A320neo) என்ற பெரிய ரக விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது.

இந்த பெரிய ரக விமானங்களில் ஒரே நேரத்தில் 180-லிருந்து 184 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவ்விமானங்களில் பிசினஸ் கிளாஸ், முதல் வகுப்பு, சாதாரண இருக்கைகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருச்சி காலை 9.10 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் இயக்கப்படும். திருச்சி - சென்னை - பகல் 11.45 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இயக்கப்படும். சென்னை - மதுரை காலை 6.10 மணி, பகல் 12.15 மணி, இரவு 8.05 ஆகிய நேரங்களில் இயக்கப்படும். மதுரை - சென்னை காலை 9.20 மணி, மாலை 3.25 மணி, இரவு 11.30 மணி ஆகிய நேரங்களில் இந்த ஏ20N விமானங்கள் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்