இந்தியத் தயாரிப்பு; சி-295 விமானச் சோதனை வெற்றி

இந்தியத் தயாரிப்பு; சி-295 விமானச் சோதனை வெற்றி

1 mins read
ea36ad63-48a6-4724-9a27-631c0e32201c
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘சி-295’ ராணுவப் போக்குவரத்து விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்திய விமானப்படை ஏறத்தாழ 295 மில்லியன் வெள்ளி (ரூ.21,935 கோடி) செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களைக் கொள்முதல் செய்து வருகிறது.

இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘சி-295’ ராணுவப் போக்குவரத்து விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்குப் பின்னணியில் இருந்த ஒட்டுமொத்தக் குழுவுக்கும் இந்திய விமானப்படை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்