அமெரிக்காவில் உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுக்கும் இந்திய நிறுவனங்கள்: வர்த்தக அமைப்பு

அமெரிக்காவில் உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுக்கும் இந்திய நிறுவனங்கள்: வர்த்தக அமைப்பு

1 mins read
d7a8a32b-f73e-4467-a120-ed48fa5192d8
எச்-1பி விசா. - படம்: oiss.yale.edu / இணையம்
Google News Preferred Icon

புதுடெல்லி: எச்-1பி விசா கட்டண உயர்வு புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அக்கட்டணம் ஒருமுறை மட்டும் செலுத்தவேண்டிய ஒன்று என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியிருப்பது தற்போதைக்கு குழப்பத்தைத் தணித்திருப்பதாக நாஸ்கோம் (Nasscom) எனப்படும் இந்தியாவின் தேசிய மென்பொருள், சேவை நிறுவனச் சங்கம் குறிப்பிட்டுள்ளதென என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும், எச்-1பி விசா வைத்திருப்போரிடையே இருந்த கவலைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சங்கம் சொன்னது. மேலும், அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்களும் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களும் எச்-1பி விசாவை சார்ந்திருப்பதைப் பெரிய அளவில் குறைத்துக்கொண்டு அதிக உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுப்பதாக நாஸ்கோம் தெரிவித்தது.

கட்டண உயர்வு அடுத்த ஆண்டுதான் நடப்புக்கு வருகிறது. அதனால் திறன் வளர்ப்பு நடவடிக்கைகைளை மேம்படுத்தி உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுக்க நிறுவனங்களுக்குப் போதுமான நேரம் இருப்பதாக நாஸ்கோம் சொன்னது. மேலும், அமெரிக்காவில் உள்ளூர்வாசிகளின் திறன்களை வளர்த்து அவர்களை வேலைக்கு எடுக்க தொழில்நுட்பத் துறை ஒரு பில்லியன் டாலருக்கும் மேலான தொகையைச் செலவிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் செயல்படும் இந்திய அல்லது இந்திய சார் நிறுவனங்கள் எச்-1பி விசாவைச் சார்ந்திருப்பதைப் பெரிய அளவில் குறைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுப்பதை அதிகரித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
இந்தியாவிசாஅமெரிக்காகட்டணம்