மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானை மிஞ்சும் இந்தியப் பொருளியல் : நிதி ஆயோக்

மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானை மிஞ்சும் இந்தியப் பொருளியல் : நிதி ஆயோக்

1 mins read
616f10bc-b333-4fbd-941c-b34bfa20901b
இந்தியப் பொருளியல் அடுத்த மூன்றாண்டுகளில் ஜெர்மனி, ஜப்பானை மிஞ்சும் என்று கூறப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை தாண்டி உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுக்கும் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி வி ஆா் சுப்ரமணியம் வியாழக்கிழமை (ஏப்ரல் 17ஆம் தேதி) தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவா்,

“உலகின் கல்வி மையமாக மாறும் வலிமை இந்தியாவிடம் உள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைத் தாண்டி உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுக்கும். 2047ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலா் பொருளியலுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடாக இந்தியா திகழும்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் சந்திக்கும் சவால்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

வசதி குறைந்த மக்களுக்கு உணவு, உடை வழங்குவது இங்கு பிரச்சினையல்ல. அறிவுசாா் பொருளாதாரமாக நாட்டை மாற்ற வேண்டும்.

தற்போது உலகளவில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. ஜப்பான் நாட்டில் 15,000 இந்திய தாதியா்களும் ஜொ்மனியில் 20,000 இந்திய சுகாதார ஊழியர்களும் உள்ளனர். இந்த இரு நாடுகளிலும் மக்கள்தொகை குறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து ஊழியர்களைத் தோ்வு செய்கின்றனா்.

உலகம் முழுவதற்கும் வேலை செய்யக்கூடிய வயதுள்ள மக்களை நிலையாக அனுப்பும் திறனுடைய நாடாக இந்தியா உள்ளது. இதுவே நமது மிகப் பெரிய பலம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்