இந்தியாவின் மோசமான ரயில் விபத்துகள்

இந்தியாவின் மோசமான ரயில் விபத்துகள்

2 mins read
7c700076-be0f-4f2a-aab8-7525ecea6ab8
விபத்தில் சிக்கிக்கொண்டோரை தேடி மீட்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்தியாவின் ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 288 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான ரயில் விபத்து இது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள் பற்றிய விவரங்கள் இதோ:

ஜூன் 1981: புயல் வீசியபோது, அளவுக்கு அதிக கூட்டம் நிறைந்த பயணிகள் ரயிலின் ஏழு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி ஆற்றில் விழுந்தன. இதில் குறைந்தது 800 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 1988: இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் விரைவு ரயில் ஒன்று தண்டவாளத்திலிருந்து விலகி ஆற்றில் விழுந்ததில் குறைந்தது 106 பேர் மரணமடைந்தனர்.

ஆகஸ்ட் 1995: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் குறைந்தது 350 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 1999: கோல்கத்தா அருகே இரு ரயில்கள் விபத்தில் சிக்கியதில் குறைந்தது 285 பேர் இறந்தனர்.

அக்டோபர் 2005: ஆந்திர மாநிலம், வேலுகொண்டா அருகே பயணிகள் ரயிலின் பல்வேறு பெட்டிகள் தடம்புரண்டதில் குறைந்தது 77 பேர் மாண்டனர்.

ஜூலை 2011: உத்தரப் பிரதேச மாநிலம், ஃபத்தேப்பூரில் மெயில் ரயில் தடம்புரண்டதில் ஏறக்குறைய 70 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

நவம்பர் 2016: உத்தரப் பிரதேசத்தில் விரைவு ரயில் தடம்புரண்டதில் 146 பேர் மரணமடைந்தனர்; 200க்கும் மேற்பட்ட காயமடைந்தனர்.

ஜனவரி 2017: ஆந்திர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் குறைந்தது 41 பேர் இறந்தனர்.

அக்டோபர் 2018: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் திருவிழா ஒன்றுக்காக தண்டவாளத்தில் திரண்டிருந்த கூட்டத்தினர் மீது பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர்; 57 பேர் காயமடைந்தனர்.