அரிய கனிமவளத் துறையில் இந்தியா-மியன்மார் ஒத்துழைப்பு

அரிய கனிமவளத் துறையில் இந்தியா-மியன்மார் ஒத்துழைப்பு

1 mins read
5b1d5741-3d3a-40cf-9bcd-e87e529b08d3
உலகளவில் கனரக அரிய கனிம வளங்களின் விநியோகத்தில் பாதியளவு மியன்மாரின் கச்சின் மாநிலத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

மாண்டலே: அரிய கனிமவளத் துறையில் தென்கிழக்காசிய நாடான மியன்மாருடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரிய கனிம வளங்கள் துறையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் மாற்றுவழிகளைக் கண்டறியும் நோக்கில் இந்தியா இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மாண்டலே நகரில் நடைபெற்ற சுரங்கத் துறைக்கான கருத்தரங்கில் பேசிய மியன்மாருக்கான இந்தியத் தூதர் அபய் தாக்குர், இரு நாடுகளுக்கும் இடையில் வளரும் இருதரப்பு ஒத்துழைப்பை விவரித்தார்.

அரிய கனிம வளங்கள் தொடர்பாக இந்திய அரசதந்திரிகள் மியன்மாருக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் சென்றதை அவர் சுட்டினார்.

அண்மையில் இந்தியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட மியன்மார் அதிபர் மின் ஆங் லைங்கிடமும் அரிய கனிம வளங்கள் குறித்து தீவிரமாகப் பேசப்பட்டது.

உலகளவில் கனரக அரிய கனிம வளங்களின் விநியோகத்தில் பாதியளவு மியன்மாரின் கச்சின் மாநிலத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. பின்னர் அவை சுத்திகரிப்புக்காகச் சீனாவிற்கு அனுப்பப்படுகின்றன.

கனரக அரிய கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள் மின்வாகனங்கள், காற்றாலைத் தயாரிப்புக்கு முக்கியமானதாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்கனிமவளம்ஏற்றுமதி