இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

1 mins read
8d056223-0f98-48da-958a-7dd01f1feda0
இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இந்திய அதிபர் திரௌபதி முர்மு திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2025ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி வரை அவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்.

இதற்கு முன்பு நீதிபதி டி.ஓய். சந்திரசூட் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.

அவர் நவம்பர் 10ஆம் தேதியன்று பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றார்.

புதிய தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழா இந்திய அதிபர் மாளிகையில் நடைபெற்றது.

அதில் இந்தியத் துணை அதிபர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், தற்போதைய நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சஞ்சீவ் கண்ணா 1960ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர்.

1980ஆம் ஆண்டு டெல்லி ஸ்டீஃபன் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

2016ஆம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் 2019ஆம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்