இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல், அந்நிய நேரடி முதலீடு உயர்வு

இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல், அந்நிய நேரடி முதலீடு உயர்வு

1 mins read
8f6e36ab-0fb9-442d-9712-31ad9bdbbb52
இறக்குமதிகள் மீதான வரிகள் அதிகரித்ததே ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க முக்கியமான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - சித்திரிப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் பொருள்-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 2.23 லட்சம் கோடியாகப் பதிவானது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத வசூல் 8.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இறக்குமதிகள் மீதான வரிகள் அதிகரித்ததே ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க முக்கியமான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த 2025-26ஆம் நிதியாண்​டில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்​லியன் அமெரிக்க டாலரை (சு​மார் ரூ. 8.56 லட்​சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்​ள​தாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்நாட்டின் தொழில், உள்​நாட்டு வர்த்தக மேம்​பாட்​டுத் துறை​யின் செய​லா​ளர் அமர்​தீப் சிங் பாட்​டியா செய்தியாளர்​களிடம் கூறுகையில், அந்​நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்​ப​தற்​காக அரசு தொடர்ந்து பல்​வேறு சீர்​திருத்த நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​வதாகக் குறிப்பிட்டார்.

அதன் பலனாக, கடந்த 2025 ஏப்​ரல் முதல் 2026 பிப்​ர​வரி வரையிலான 11 மாத காலத்​தில் இந்​தி​யா​வின் அந்​நிய நேரடி முதலீடு 88 பில்​லியன் டாலரைக் கடந்​துள்​ளது. தற்​போது மார்ச் மாத புள்​ளி​விவரங்​கள் கணக்​கிடப்​பட்டு வரும் நிலை​யில், கடந்த 2025-26 முழு நிதி​யாண்​டில் இந்த முதலீடு 90 பில்​லியன் டாலரை எட்​டும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

குறிப்புச் சொற்கள்
ஜிஎஸ்டிஅதிகரிப்புவர்த்தகம்முதலீடு