வண்ணப்பூச்சைத் தெளித்த பேரன்மீது சூடான நீரை ஊற்றிய பாட்டி

வண்ணப்பூச்சைத் தெளித்த பேரன்மீது சூடான நீரை ஊற்றிய பாட்டி

1 mins read
https://www.ndtv.com/nagpur-news/nagpur-woman-pours-hot-water-on-grandson-4-for-spraying-colour-on-her-11169039
75241258-f66a-4066-b30f-62fb358c445b
சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சி. - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் பேரன் தன்மீது வண்ணப்பூச்சைத் தெளித்த ஆத்திரத்தில், பாட்டி ஒருவர் கொதிக்கும் நீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அச்சிறுவனுக்கு 45 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறை மார்ச் 4ஆம் தேதி தெரிவித்தது.

சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளன.

மார்ச் 3ஆம் தேதி, ஓம் ஹரிஷ் வாங்க் எனும் நான்கு வயதுச் சிறுவன், வண்ணப்பூச்சு நிரப்பப்பட்ட தெளிப்பானுடன் தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான்.

அவன் விளையாட்டாகத் தனது பாட்டி சிந்து தாக்கரே மீது அந்த வண்ணப்பூச்சைத் தெளித்தார். அப்போது, அந்தப் பாட்டி கொதிக்கும் நீரை எடுத்து அச்சிறுவன்மீது ஊற்றியதாகக் காவல்துறை தெரிவித்தது.

இடுப்புப் பகுதிக்குக் கீழே பலத்த தீக்காயமடைந்த ஓம், நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 45 விழுக்காடுத் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்