திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம்: 3 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசை

திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம்: 3 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசை

1 mins read
0aacece9-5dcc-499b-a687-cacc34a09a86
தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை, வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தர்களின் வருகை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) காலைமுதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

வைகுந்தம் தங்கும் வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதையடுத்து, பக்தர்கள் ஏறக்குறைய 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஷீலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் வரிசையில் காத்திருக்கும் முதியவர்களும் குழந்தைகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதைக் கருத்தில் கொண்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்குத் தொடர்ச்சியாக குடிநீர், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 80,350 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், 36,597 பேர் முடி காணிக்கை செலுத்தினர். கோவிலின் உண்டியல் வருமானமாக ரூ.3.27 கோடி வசூலாகியதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

கூட்ட நெரிசல் காரணமாக, நேரடி இலவசத் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் குறைந்தது 18 மணி நேரம் காத்திருந்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. - படம்: மாலை மலர்
குறிப்புச் சொற்கள்