மகா கும்பமேளா தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது; யாருக்கும் காயம் ஏற்படவில்லை

மகா கும்பமேளா தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது; யாருக்கும் காயம் ஏற்படவில்லை

1 mins read
b5c63d32-b94b-4e6c-8ead-cd6de9cb114f
குறைந்தது பத்து கூடாரங்களுக்குத் தீ மிக வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் மண்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பிரயாக்ராஜ்: இந்தியாவில் நடைபெற்று வரும் உலகின் மிகப் பெரிய இந்து சமய நிகழ்வான மகா கும்பமேளா நடந்து வரும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தீச்சம்பத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் உத்தரப் பிரதேச அதிகாரிகள் கூறினர்.

குறைந்தது பத்து கூடாரங்களுக்குத் தீ மிக வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தற்போது நிலைமை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் மண்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்