கேரளாவில் 2.69 கோடி வாக்காளர்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கேரளாவில் 2.69 கோடி வாக்காளர்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2 mins read
51214c7f-14ab-4b65-a6b1-fb839337f55e
தமிழகம், புதுவை, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. - படம்: லா அண்ட் அதர் திங்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: மிக விரைவில் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்ஐஆர்) மேற்கொண்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, கேரளாவிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதில், 2.69 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 13,126,048 ஆண் வாக்காளர்களும் 13,827,319 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 277 ஆகும்.

முன்னதாக, பழைய வாக்காளர் பட்டியலில் 27,850,855 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். எனினும், எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு 897,211 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலில் 223,558 வெளிநாடுவாழ் வாக்காளர்களும் பாதுகாப்புப் படைகளில் பணிபுரிந்துவரும் 54,110 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளவர்கள் மீண்டும் தங்கள் பெயரைச் சேர்க்க உரிய ஆவணங்களுடன் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 23ஆம் தேதியும் மேற்குவங்கத்தில் 28ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அந்த ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

புதுவையில் கடந்த 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த 10ஆம் தேதி அசாம் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.

தமிழகம், புதுவை, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்