மாநிலங்களவை எம்.பி ஆகிறார் தமிழகத்தின் மீனாட்சி

மாநிலங்களவை எம்.பி ஆகிறார் தமிழகத்தின் மீனாட்சி

1 mins read
78a4be7c-1fd2-451c-9f84-85130614b4c3
காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினராக 52 வயதான மீனாட்சி நடராஜன் தேர்வாகியுள்ளார். - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

புதுடெல்லி: காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினராக 52 வயதான மீனாட்சி நடராஜனை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் எம்.பி. பதவி வேண்டாம் என்று கூறியதால், அவருக்குப் பதிலாக மீனாட்சி நடராஜனை ராகுல் காந்தி தேர்வுசெய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீனாட்சி, ஏற்கெனவே மக்களவை உறுப்பினராக இருந்தவர். தமிழரான இவர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

தமிழகத்தின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரைப் போலவே, மீனாட்சியும் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்.

மக்களவையில் பாஜகவுக்குத் தலைவலி கொடுக்கும் வகையில் ஜோதிமணி, சுதா போன்ற பெண் எம்.பி.க்கள் செயல்பட்டு வருகின்றனர். மாநிலங்களவையில் இவர்களைப்போல அதிரடியாகச் செயல்படக்கூடியவர் மீனாட்சி நடராஜன்.

பாஜக வட்டாரங்களில் மீனாட்சியை ‘நகர்ப்புற நக்சல்’ என அழைக்கின்றனர். இவர் மாநிலங்களவைக்கு வந்தால், மக்களவையைப் போலவே இங்கும் அமளி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்