இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 24.6% அதிகரிப்பு

இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 24.6% அதிகரிப்பு

2 mins read
61db46c0-6fe6-4b02-b1bb-8cb737d7e5f8
இருசக்கர மின்சார வாகனப் பிரிவில், 2025 நிதியாண்டில் விற்பனை அளவு 11.50 லட்சமாகப் பதிவானது. அது தற்போது 14 லட்சத்துக்கு அதிகரித்துள்ளது. இது 21.81 விழுக்காட்டு வளர்ச்சியாகும். - கோப்புப்படம்: இந்தியா ரிடெய்லர்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மின்சார வாகன விற்பனை 24.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 24.52 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியது.

2026 நிதியாண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 14 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் பயணிகளுக்கான வாகனங்கள் மட்டும் ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆகும்.

பயணிகளுக்கான வாகன விற்பனை 83 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோல் இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள், வர்த்தக வாகனங்கள் என அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய மொத்த மின்சார வாகனச் சில்லறை விற்பனை 24.52 லட்சமாகப் பதிவாகி உள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகி உள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விக்னேஷ்வர் கூறினார்.

இருசக்கர மின்சார வாகனப் பிரிவில், 2025 நிதியாண்டில் விற்பனை அளவு 11.50 லட்சமாகப் பதிவானது. அது தற்போது 14 லட்சத்துக்கு அதிகரித்துள்ளது. இது 21.81 விழுக்காட்டு வளர்ச்சியாகும்.

அதேபோல் 2025 நிதியாண்டில், ஏறக்குறைய 6.99 லட்சமாகப் பதிவான மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை தற்போது 8.30 லட்சத்துக்கு உயர்ந்துள்ளது. இது 18.97 விழுக்காட்டு வளர்ச்சியாகும்.

வர்த்தகத் துறைக்கான மின்சார வாகனங்களின் விற்பனை 2025 நிதியாண்டில் 8,820 வாகனங்களாகப் பதிவானது. நடப்பு 2026 நிதியாண்டில் அந்த எண்ணிக்கை 19,454 வாகனங்களுக்கு அதிகரித்துள்ளது. இது 120.57 விழுக்காட்டு வளர்ச்சியாகும்.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள், மானியங்களை அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்