தந்தைக்கு உடல்நலம் சரியில்லை; விமான நிலையங்களில் மோசடி செய்யும் ஆடவர்

தந்தைக்கு உடல்நலம் சரியில்லை; விமான நிலையங்களில் மோசடி செய்யும் ஆடவர்

1 mins read
0eb5da62-cfba-49a0-ab41-e61b702b049d
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

இந்திய விமான நிலையங்களில் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி விமானப் பயணிகள் பலரிடம் பணம் வாங்கி வந்த ஆடவர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடவர் சென்னையைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடவர் மே 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

விக்னே‌ஷ் என்ற அந்த 27 வயது ஆடவர், பார்க்க நன்றாக ஆடை உடுத்தி பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சக பயணிகளிடம் சோகமாக தமது கதையைச் சொல்லி பல ஆயிரம் ரூபாய்களையும் அவர் பெற்றுள்ளார்.

ஆடவர் விமான நிலையத்தில் சந்தேகம் வரும் விதமாக நடந்து கொண்டதை அடுத்து அவரை அதிகாரிகள் விசாரித்தனர்.

விக்னே‌ஷ் இதே போன்று ஹைதராபாத், சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல விமான நிலையங்களில் மோசடி செய்துள்ளார்.

ஆடவரிடம் 26 வங்கி அட்டைகள் இருந்தன. விசாரணைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்