பேரிடர் மேலாண்மை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

1 mins read
178a8ea6-3653-4511-84d3-a875519db24e
டெல்லி நாடாளுமன்றம். - படம்: கோப்புப்படம்

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மைச் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் செயல்பாட்டை பலப்படுத்துவதற்கும் அனைத்து பேரிடர்களையும் சிறப்பாக கையாளுவதற்கும் இந்த மசோதா வழி வகுக்கும்.

“புதுவகையான பேரிடர்களை எதிர்கொள்வதற்கு இந்த மசோதாவில் உள்ள சட்ட திருத்தம் உதவும். வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதற்கும் இந்த சட்ட திருத்தம் உதவும். இதனால், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் குறையாது,’’ என்று கூறினார்.

அதுபோல, லோக்சபாவில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று பாய்லர் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, 100 ஆண்டு பழமையான பாய்லர் சட்டம் - 1923க்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், “பழமையான பல சட்டங்கள் புதிய மசோதாக்களால் மாற்றப்படுகின்றன. அந்த வகையில், அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையிலான பாய்லர் மசோதா மிகவும் அவசியமான ஒன்று.

“தொழில் துறையினர் மற்றும் கொதிகலன்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை இந்த மசோதா உறுதி செய்யும். சிறு, குறு தொழில் துறையில் பணியாற்றுவோருக்கு இது பெரிதும் பயன் அளிக்கும்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்