பாலியல் குற்றவாளிகளை பாஜக வேட்டையாடி பிடிக்கும்: மோடி உறுதி

பாலியல் குற்றவாளிகளை பாஜக வேட்டையாடி பிடிக்கும்: மோடி உறுதி

1 mins read
30e349fb-e0cf-43e7-9ecb-b8b60ea0e93e
பிரதமர் மோடி. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

கோல்கத்தா: பாஜக ஆட்சி அமைந்தால் மேற்கு வங்கத்தில் சுற்றித்திரியும் ரவுடிகளையும் பாலியல் குற்றவாளிகளையும் வேட்டையாடிப் பிடிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தின் பங்கான் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நடப்பு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்றார்.

பெண்கள் மிகப்பெரிய துரோகத்திற்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் இளம் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.

எனினும், எதிர்வரும் மே 4ஆம் தேதிக்குப் பிறகு பாஜக அரசு ஒவ்வொரு ரவுடியையும் பாலியல் குற்றவாளியையும் வேட்டையாடிப் பிடித்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

பொது சுதார மையங்களில் மருத்துவச் சிகிச்சைகளுக்கு 80% கட்டணச் சலுகை, மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான இலவசப் பரிசோதனைகள், இலவசத் தடுப்பூசிகள், பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ரூ.21,000 நிதியுதவி எனப் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் திரு மோடி, பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார்.

குறிப்புச் சொற்கள்