அசாமில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக கூட்டணி

அசாமில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக கூட்டணி

1 mins read
1f95e559-4459-4b89-bd13-281b6683dc0a
ஹிமந்த பிஸ்வா சர்மா. - படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாம் முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

அசாமில் மொத்தம் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, அங்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. 85.96 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.

அந்த வாக்குகளை எண்ணும் பணி திங்கட்கிழமை (மே 4) நடைபெற்றது.

இவ்விரு கூட்டணிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறிவந்த நிலையில், பாஜக பெரும் வெற்றியை எட்டியுள்ளது.

அசாமில் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

தற்போது மூன்றாவது முறையாக, அக்கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்