தேர்தலுக்காக ஊர் திரும்பும் பீகார் மக்கள்

1 mins read
a1f1e64a-1f10-4c62-926f-0db02dda93d0
பீகாரைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். - சித்திரிப்புப் படம்: ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் நவம்பர் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து, தமிழகத்தின் திருப்பூர் பகுதியில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான பீகார் ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சொந்த மாநிலத்துக்குச் செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.

பீகாரைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

அண்மையில் தீபாவளியைக் கொண்டாடுவதற்குக்கூட திருப்பூரில் இருந்து பீகார் சென்ற பலரும் தேர்தல் நடைபெற இருப்பதால் திருப்பூர் வரவில்லை. தேர்தல் முடிந்த பிறகே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்