சமூக ஊடகங்கள் தொடர்பான புதிய கொள்கைக்கு ஒப்புதல்

1 mins read
8b9a49d1-4323-4379-b09e-d233b319e42b
ஃபேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்), இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கண்டனத்துக்குரிய தகவல்களை பதிவிட்டால் புதிய கொள்கை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் - படம்: பிக்சாபே

லக்னோ: சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் உத்தரப் பிரதேச அரசாங்கம் புதிய சமூக ஊடக கொள்கையை அறிவித்துள்ளது.

அதற்கு அம்மாநில அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஃபேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்), இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கண்டனத்துக்குரிய தகவல்களை பதிவிட்டால் புதிய கொள்கை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேச விரோத தகவல்களை பதிவிட்டால் மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள்காலம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆபாசம், அவதூறு தகவல்களை பதிவிட்டால், குற்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இதற்குமுன்னர் இதுபோன்ற நடவடிக்கைகள் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் எடுக்கப்பட்டு வந்தன.

மேலும், அரசின் திட்டங்கள், சாதனைகள் உள்ளிட்டவையை பகிர்ந்தால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு விளம்பரம் அளித்து ஊக்குவிக்கப்படும் என்றும் தனிப்பட்ட நபர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்