‘ஏஐ’ தொழில்நுட்பம் மனித குலத்துக்கு மிரட்டல் அல்ல: நாராயணமூர்த்தி

‘ஏஐ’ தொழில்நுட்பம் மனித குலத்துக்கு மிரட்டல் அல்ல: நாராயணமூர்த்தி

1 mins read
e4eb5b8a-acea-4269-bf7a-5867ebfa678d
நாராயணமூர்த்தி. - படம்: புரூ டைம்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: ‘ஏஐ’ தொழில்நுட்பம் மனித குலத்துக்கு மிரட்டல் அல்ல என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ‘ஏஐ’ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு கிடைத்துள்ள வெகுமதி என்றார்.

அனைத்தையும்விட மனிதனின் மூளைதான் சிறந்தது என்றும் ஆற்றலில் மனித மூளையை விஞ்ச செயற்கை நுண்ணறிவால் இயலாது என்றும் திரு நாராயணமூர்த்தி குறிப்பிட்டார்.

எத்தகைய சூழலிலும் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித மூளையை முந்திச்செல்ல முடியாது எனத் தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்த அவர், குறிப்பிட்ட சில வளங்களை போதுமான அளவுக்கு மட்டும் பயன்படுத்த கற்றுத்தர வேண்டும் என்றார்.

தனது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வெளிப்படையான கொள்கைகள் பின்பற்றப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள ஆறு மாதப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அதில் பெரும்பாலானோர் தேர்ச்சி அடைந்துவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்