அரசாங்கத் தலைவராக 8,931 நாள்கள்: மோடி சாதனை

அரசாங்கத் தலைவராக 8,931 நாள்கள்: மோடி சாதனை

1 mins read
ccc8770e-2489-4fe7-9b9d-09c95905f9b7
மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். - கோப்புப்படம்: நியூஸ் ஆன் ஏர்
Google News Preferred Icon

புதுடெல்லி: மக்களால் ஜனநாயக முறைப்படித் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தின் தலைவராக அதிக நாள்கள் பணியாற்றிய சாதனையைப் படைத்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் பதவிகளில் இருந்து வருகிறார்.

இவ்வாண்டு மார்ச் 22ஆம் தேதியுடன் மோடி குஜராத் முதல்வர், நாட்டின் பிரதமர் ஆகிய பொறுப்புகள் ஏற்று 8,931 நாள்கள் நிறைவு செய்துள்ளார்.

இதற்கு முன்பு இந்தியாவின் சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் 8,930 நாள்கள் முதல்வராகப் பதவி வகித்ததுதான் சாதனையாக இருந்தது.

தற்போது திரு மோடியால் இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார்.

இதையடுத்து, 2014ஆம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பின்னர் 2019, 2024 பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார்.

மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்