நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டிய 576 இந்தியக் குடிமக்கள்

நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டிய 576 இந்தியக் குடிமக்கள்

2 mins read
c0e7d079-45be-4bab-860a-9e692bdfddbd
வருமான வரிச் சட்டப்படி ‘கோடீஸ்வரர்’ என்ற சொல்லுக்குச் சட்டபூர்வ வரையறை எதுவும் இல்லை என்று  நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறினார். - சித்திரிப்புப் படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் 2025-26ஆம் நிதியாண்டில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டிய குடிமக்களின் எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, நூறு கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டிய தனி நபர்களின் எண்ணிக்கையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது என்றார்.

இந்த எண்​ணிக்கை 2022-23ல் 301ஆகவும் 2023-24ல் 284ஆகவும் 2024-25ல் 415ஆகவும் இருந்​தது. தற்​போது 2025-26ஆம் நிதியாண்​டில் 576ஆக உயர்ந்​துள்​ளதாகவும் வருமான வரித்தாக்கல் கணக்குகளின்படி இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பங்கஜ் சௌத்ரி கூறினார்.

வருமான வரிச் சட்டப்படி ‘கோடீஸ்வரர்’ என்ற சொல்லுக்குச் சட்டபூர்வ வரையறை எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், கோடீஸ்வரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு குறித்த தரவுகளை அரசு பராமரிக்கவில்லை என்றார்.

அண்மைய குடும்ப நுகர்​வுச் செல​வினக் கணக்​கெடுப்​பின்​படி, கிராமப்​புறங்​கள், நகர்ப்​புறங்​கள் இரண்​டிலுமே வரு​மான ஏற்றத் தாழ்வு குறைந்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளதாக பங்கஜ் சௌத்ரி கூறினார்.

15 வயது மற்​றும் அதற்கும் மேற்​பட்​டோருக்​கான வேலை​யின்மை விகிதம் 2022ல் 3.6 விழுக்காடாக இருந்​தது என்றும் தற்போது அது 3.1 விழுக்காடாக குறைந்​துள்​ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் தரவு​களின்​படி கடந்த பத்​து ஆண்​டு​களில் வறுமை​ குறிப்​பிடத்​தக்க அளவில் குறைந்​துள்​ளது என்று அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.

முற்​போக்​கான வரு​மான வரி நடை​முறை, வேலை​ வாய்ப்​புடன் இணைக்​கப்​பட்ட வரிச் சலுகைகள், புதுத் தொழில்கள், கூட்​டுறவு அமைப்​பு​களுக்​கான ஆதரவு, சுகா​தா​ரம், திறன் மேம்​பாடு, கிராமப்​புற வாழ்​வா​தா​ரத்தை மைய​மாகக் கொண்ட நலத்​திட்​டங்​கள் மூலம் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய பொருளியல் வளர்ச்​சியை அரசு ஊக்​கு​வித்து வரு​வதாகக் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியர்கள்வருமானம்நிதிவருமான வரிவரிச்சலுகைசுகாதாரம்கிராமம்மத்திய அரசுநாடாளுமன்றம்