இந்தியாவில் பாம்பு கடித்து 431 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் பாம்பு கடித்து 431 பேர் உயிரிழப்பு

1 mins read
கர்நாடகத்தில் 157 பேர் பாம்புக் கடியால் உயிரிழந்தனர்.
dd25f549-b8e3-4350-970d-82ca8991ff0b
மாநில வாரியான புள்ளி விவரங்களின்படி, கர்நாடகத்தில் தான் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.  - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் பாம்பு கடித்து 431 பேர் மாண்டனர்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரபா மல்லிகார்ஜுன், நாட்டில் பாம்புக் கடியால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்தார்.

“நாட்டில் பாம்புகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2023ல் 183ஆக இருந்த எண்ணிக்கை 2024ல் 370ஆக கூடியது. கடந்த ஆண்டு 2025ல் 431ஆக மேலும் அதிகரித்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில வாரியான புள்ளி விவரங்களின்படி, கர்நாடகத்தில்தான் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 157 பேர் பாம்புக் கடியால் உயிரிழந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலை அளிப்பதாகத் திரு கீர்த்தி வர்தன் சிங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்