போலி ஆதார் அட்டைகளுடன் 27 பங்ளாதேஷியர் கைது

போலி ஆதார் அட்டைகளுடன் 27 பங்ளாதேஷியர் கைது

1 mins read
f85ab3f5-687c-4504-a008-04d3a0c5d6a7
கேரள மாநிலத்தில் ஒரே நேரத்தில் இத்தனை பங்ளாதேஷியர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

கொச்சி: போலி ஆவணங்களுடன் கேரள மாநிலத்தில் தங்கியிருந்த 27 பங்ளாதேஷியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்புப் படையினருடன் இணைந்து எர்ணாகுளம் காவல்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் பிடிபட்டனர்.

கேரள மாநிலத்தில் ஒரே நேரத்தில் இத்தனை பங்ளாதேஷியர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

சில வாரங்களுக்குமுன் தஸ்லிமா பேகம் என்ற 28 வயது பங்ளாதேஷியப் பெண் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து, எர்ணாகுளம் புறநகர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் வைபவ் சக்சேனாவின் ‘ஆப்பரேஷன் கிளீன்’ என்ற சிறப்பு நடவடிக்கைமூலம் மற்ற 28 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொச்சியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறி, கொபித்திபா, 22, ருபினா ஷேக், 19, என்ற இரு பெண்கள் வியாழக்கிழமையன்று (ஜனவரி 30) பிடிபட்டனர்.

அவர்கள் பங்ளாதேஷிலிருந்து கள்ளத்தனமாக எல்லையைக் கடந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைந்ததாகவும் அதன்பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

அங்கு அவர்கள் ஒரு முகவர் மூலமாக ஆதார் அட்டைகளைப் பெற்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவ்விருவரும் பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பங்ளாதேஷியர் பலர் பிடிபட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய உதவும், போலி ஆவணங்களைப் பெற்றுத் தரும் முகவர்களைப் பிடிக்கும் நோக்கில் மேற்கு வங்கம் வரையிலும் விசாரணையை விரிவுபடுத்த கேரளக் காவல்துறை முடிவுசெய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கேரளாபங்ளாதேஷ்ஆதார்