ஏர் இந்தியாவில் இருக்கை மீது சிறுநீர் கழித்த ஆசாமி

ஏர் இந்தியாவில் இருக்கை மீது சிறுநீர் கழித்த ஆசாமி

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி இருக்கை மீது குடிபோதையில் ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லியிலிருந்து நியூ யார்க் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் இருக்கை மீது குடிபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படு கிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் இந்தி ராணி கோஸ் என்பவர் வெளி யிட்ட டுவிட்டர் தகவலில் ஏர் இந்தியா அவமானமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று முன் தினம் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், என் அம்மா உட் கார்ந்திருந்த இருக்கை மீது சிறு நீர் கழித்துள்ளார். இது எனக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, இது குறித்து ஏர் இந்தியா உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.