நாடாளுமன்றப் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.140 மில்லியன்

நாடாளுமன்றப் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.140 மில்லியன்

1 mins read
c344be56-41a8-462f-a1fd-1803b824966a
இந்திய நாடாளுமன்றத்தின் மேம்பட்ட பாதுகாப்புக்கான ஏலக் குத்தகையைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 18. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேம்படுத்தப்பட உள்ளன.

இதற்காக, மின்சாரப் பாதுகாப்பு மதில், ஒளியிழைத் தொழில்நுட்பம் (ஃபைபர் ஆப்டிக்ஸ்), அடிப்படையிலான ஊடுருவல் கண்டறியும் அமைப்பு, கண்காணிப்புக் கேமரா நிர்வாக முறை ஆகியவை நிறுவப்பட உள்ளன.

மத்திய பொதுப்பணித் துறை, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏலக்குத்தகையை வெளியிட்டுள்ளது. 

இதன் மதிப்பு கிட்டத்தட்ட 14.63 கோடி ரூபாய். ஏலக்குத்தகையைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 18 ஆகும்.

ஏலக்குத்தகைக்கான ஆவணத்தின்படி, பாதுகாப்பு மதில், சிசிடிவி அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான காணொளி ஒருங்கிணைப்பு தடையற்றதாக இருக்க வேண்டும்.

ஊடுருவல்கள் ஏற்படுவதைக் தடுக்கக்கூடிய வகையில் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று குத்தகை ஆவணம் குறிப்பிடுகிறது.

நான்கு மாதங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடுருவ முயன்ற 20 வயதான நபரைப் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்தது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்பாதுகாப்புஏலக்குத்தகைஊடுருவல்