‘அன்னையர் திலகம்’ விருது வழங்கி மூவர் சிறப்பிப்பு

‘அன்னையர் திலகம்’ விருது வழங்கி மூவர் சிறப்பிப்பு

1 mins read
19b451d2-2228-4fb2-b01d-b1babaeef188
டாக்டர் உமா ராஜன், திருவாட்டி சைனவா பீபீ, திருவாட்டி செங் மியோவ் யெங் ஆகியோர்க்கு விருது வழங்கப்பட்டது. - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
Google News Preferred Icon

அன்னையர் தினமான மே 10ஆம் தேதியன்று தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம், அன்பாலும் அரவணைப்பாலும் சிறந்த அன்னையராக மின்னிய மூவருக்கு ‘அன்னையர் திலகம்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

இந்திய அன்னையாக டாக்டர் உமா ராஜன், மலாய் அன்னையாக திருவாட்டி சைனவா பீபீ, சீன அன்னையாக திருவாட்டி செங் மியோவ் யெங் ஆகியோரே அவ்விருது பெற்றோர்.

தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் மாலை 6 மணியளவில் நடந்த இந்த நிகழ்ச்சியை முற்றிலும் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்டது.

ஆடல் பாடல் விளையாட்டு அங்கங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. பார்வையாளர்களாகப் பங்கேற்றவர்களும் அன்னையைப் பற்றிய தங்களின் நீங்கா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டும் சிலர் இனிமையாகப் பாடியும் அனைவரையும் மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முனைவர் சீதாலட்சுமி, புறநானூற்றிலிருந்தும் மற்ற தொன்மைவாய்ந்த இலக்கியங்களிலிருந்து தமிழ் அன்னையரின் வீரத்தையும் பெருமையையும் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்