தமிழ் இளையர் விழா 2024: இவ்வார நிகழ்ச்சிகள்

தமிழ் இளையர் விழா 2024: இவ்வார நிகழ்ச்சிகள்

2 mins read
253bbe13-63ea-44c7-9e1a-c4d04c1201ee
இளையர்களின் திறன்களைக் கண்டறிந்து முன்னிலைப்படுத்துவது இவ்வாண்டின் தமிழ் இளையர் விழா 2024இன் நோக்கம். - படம்: தமிழ் இளையர் விழா 2024
Google News Preferred Icon

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆண்டின் தமிழ் இளையர் விழாவில் மொத்தம் 10 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது. 

‘ஆற்றல்’ எனும் கருப்பொருளை ஒட்டி இவ்வாண்டின் தமிழ் இளையர் விழா நடைபெறகிறது.

விழாவின் தொடக்கமாக சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம் வழங்கும் ‘உதயசூரியன்’ நாடகப் பயிலரங்கு இடம்பெறவிருக்கிறது. குரல் வளம், பேச்சுத்திறன், நாடக ஒப்பனை போன்ற மேடை நாடக உத்திகளைப் பங்கேற்பாளர்கள் கையாள்வர்.   

நான்கு நாள்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கு, ‘டான்ஸ்போர்ட் டி ஆலன்’ வளாகத்தில் செப்டம்பர் 7, 8ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். 

தொடக்கநிலை 5, 6 மாணவர்களுக்கு ‘தமிழ் கட்டுரை எழுதும் திறன் வளர்க்கும்’ பட்டறை தேசிய நூலகக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. 

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளை முன்னிட்டு தமிழ் கட்டுரைக்காக எப்படி தயாராவது, இருவழி கற்றல் போன்ற அம்சங்களை மாணவர்கள் இதில் எதிர்பார்க்கலாம். 

அதே தினம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அவாண்ட் நாடகக் குழுவின் திடீர் நாடக போட்டியும் ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் இடம்பெறவுள்ளது. பங்கேற்பாளர்கள் மேடை நாடக நடிப்பின் நுணுக்கங்களை கற்று, ஐவர் கொண்ட குழுக்களில் ஒரு மேடை நாடகத்தை படைப்பார்கள். 

தமிழில் வழங்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் 35 வயதுக்குட்பட்ட இளையர்களை இலக்காகக் கொண்டவை.

தமிழ் இளையர் விழா குறித்த மேல்விவரம் அறிய www.tamil.org.sg இணையப்பக்கம் அல்லது வளர்தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்