தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் தமிழ்மொழி விழாப் பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் தமிழ்மொழி விழாப் பட்டிமன்றம்

1 mins read
11146b28-98a4-4e68-9eed-9b663c527ee4
பட்டிமன்றம் உட்லண்ட்ஸ் நூலகத்தில் நடைபெறும். - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தமிழ்மொழி விழாவுக்காக ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த மார்ச் 14ஆம் தேதி ஒரு பயிலரங்கை நடத்தி, மார்ச் 28ஆம் தேதி மாணவர்களுக்கான போட்டி ஒன்றை ஏற்பாடுசெய்து அதில் வென்ற நான்கு மாணவர்களை உள்ளடக்கிய சிறப்பு பட்டிமன்றமாக அது இடம்பெறுகிறது.

உட்லண்ட்ஸ் நூலகத்தில் இடம்பெறும் அப்பட்டிமன்றம், ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 4.30 மணிக்குச் சிற்றுண்டியுடன் தொடங்குகிறது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்முரசு ஆசிரியர் த. ராஜசேகர் கலந்துகொள்வார். பட்டிமன்ற நடுவராக கலைஞர் வடிவழகன் பி.வி.எஸ்.எஸ் பட்டிமன்றத்தை முன்னெடுத்துச் செல்வார்.

பட்டிமன்றத் தலைப்பு ‘நிறைவான வாழ்க்கைக்கு அவசியத் தேவை செயற்கை நுண்ணறிவா? இயற்கையோடு நூலறிவா? என்பதாகும்.

செயற்கை நுண்ணறிவே என்ற அணியில் திருமதி அனுராதா, செல்வி சுரேஷ்குமார் கார்த்திகா, செல்வி ராஜரத்தினம் சர்வினி ஆகியோரும் இயற்கையோடு நுண்ணறிவே என்ற தலைப்பில் திருமதி சக்திதேவி, செல்வன் கௌதம் கணேஷ்குமார், செல்வி சனாகான் ஆகியோரும் வாதாடுவார்கள்.

மேல்விவரங்களுக்கு, முனைவர் நிஜார் 85034204 (துணைத்தலைவர் த.ப.க.க), திரு ஆனந்தன் 96436427 (துணைச்செயலாளர் த.ப.க.க) ஆகியோரைத் தொடர்புகொள்ளவும்.

குறிப்புச் சொற்கள்
பட்டிமன்றம்TAMIL LANGUAGEசெயற்கை நுண்ணறிவு