சிறப்புத் தேவையுள்ள கலைஞர்களின் திறன்களைக் கொண்டாடும் கலைவிழா

சிறப்புத் தேவையுள்ள கலைஞர்களின் திறன்களைக் கொண்டாடும் கலைவிழா

1 mins read
f5bdf966-1b99-4b4c-8426-aca860608b17
வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் 2022’ நிகழ்வில் கலந்துகொண்ட அப்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
Google News Preferred Icon

சிறப்புத் தேவை, உடற்குறையுள்ள கலைஞர்களின் திறன்களையும் வாழ்க்கைப் பாதைகளையும் கொண்டாடும் சிங்கப்பூரின் ஆகப்பெரிய கலைவிழா இம்மாதம் திரும்புகிறது.

வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் 2023’, கலைக் கண்காட்சிகள், நேரடி நிகழ்ச்சிகள், கலைப் படைப்பு ஏலம்வழி கலைஞர்களின் திறன்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைகிறது.

‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’, தொடர்ச்சியான பல நடவடிக்கைகளையும் 150க்கும் மேற்பட்ட கலைஞர்களின் 350க்கும் அதிகமான கலைப் படைப்புகளையும் காட்சிப்படுத்தும்.

இக்கண்காட்சி நவம்பர் 11 முதல் 26ஆம் தேதி வரை ‘அவர் தெம்பனிஸ்’ ஹப்பின் ‘ஃபெஸ்டிவ்’, மத்திய பிளாசாவிலும் நவம்பர் 18 முதல் டிசம்பர் 3 வரை ‘ஒன் பொங்கோல்’ ஹப்பின் ‘செலப்ரேஷன்’ சதுக்கம் 1, 2 மற்றும் பொங்கோல் நூலகத்திலும் நடைபெறும்.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

விற்பனையாகும் கலைப் படைப்புகள், பொருள்கள்வழி திரட்டப்படும் நிதி, சிறப்புத் தேவை, உடற்குறையுள்ளோரை ஆதரிக்கப் பயன்படும்.

‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’ 2023 பற்றிய மேல்விவரங்களுக்கு: https://shapinghearts.sg/

குறிப்புச் சொற்கள்