நாளை முருகன் திருக்குன்றம் கோயில் குடமுழுக்கு

2 mins read
a741c5c0-1d1f-4d21-b673-ee313cfe9fa0
மூன்றாவது முறையாக குடமுழுக்கு காணும் ஸ்ரீ முருகன் திருக்குன்றம் கோயில். படம்: வீ.பழனிச்சாமி -

மோன­லிசா

அப்­பர் புக்­கிட் தீமா சாலை­யில் அமைந்­துள்ள முரு­கன் திருக்­குன்­றம் கோயி­லின் மாபெ­ரும் குட­மு­ழுக்கு நாளை நடை­பெ­ற­வுள்­ளது. இத­னை­யொட்டி நாளை அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் ஆறாம் கால யாக பூஜை­கள் தொடங்­க­வுள்­ளன. கடம் புறப்­பாடு சரி­யாக காலை 7 மணிக்கு தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்­றா­வது முறை­யாக குட­மு­ழுக்கு காணும் இக்­கோ­யி­லில் இம்­முறை சர்­வ­சா­த­க­மாக பொறுப்­பேற்­றி­ருப்­ப­வர் பிள்­ளை­யார்­பட்டி கோயி­லின் தலைமை அர்ச்­ச­கர் டாக்­டர் கே பிச்சை குருக்­கள்.

குட­மு­ழுக்கு நிகழ்­விற்கு பின்­னர் காலை 10 மணி­ய­ள­வில் கோவி­லின் பின்­பு­றத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள கூடா­ரத்­தில் பக்­தர்­களுக்கு அன்­ன­தா­னம் வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் மாலை 5 மணிக்கு சுவாமி திருக்­கல்­யா­ண­மும் வெள்ளி ரதத்­தில் சுவாமி திரு­வீதி உலா வரு­த­லும் நடை­பெ­றும்.

கொவிட்-19 நோய்த்­தொற்று காலத்­தில் தடைப்­பட்ட இக்­கோயி­லின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் இவ்­வாண்டு மீண்­டும் தொடங்­கப்­பட்­டது.

இக்­கோ­வில் சிற்­பங்­க­ளின் மறு­சீ­ர­மைப்­பு­களை தமிழ்­நாட்­டின் திருக்­க­டை­யூ­ரி­லி­ருந்து வந்­துள்ள சிற்­பக்­க­லை­ஞர்­களும் வண்­ணப் பூச்சு கலை­ஞர்­களும் மேற்­கொண்­டுள்­ள­னர்.

இக்­கு­ழு­வின் தலைமைச் சிற்­பக்­க­லை­ஞர் திரு லோக­நா­தன் வாசு­தே­வன், 56, "இக்­கோ­யி­லின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­களை எட்டு மாத காலத்­திற்­குள் சிறப்­பாக முடித்­துள்­ளோம். சிங்­கப்­பூ­ரில் முதல்­மு­றை­யாக இக்­கோ­வி­லில் சுவாமி ஐயப்­பன் சன்­ன­தி­யில் சப­ரி­ம­லை­யில் இருப்­பது போலவே பக்­தர்­கள் நடக்­கும் வண்­ணம் 18 படி­கள் அமைத்து சுவா­மியை சுற்றி வரும் வழித்­த­ட­மும் அமைத்­துள்­ளோம்," என்று கூறி­னார்.

இக்­கு­ட­மு­ழுக்கு விழா­வில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொள்­வார் என்று தெரி விக்கப்பட்டது.

இவ்­வி­ழா­வின் நேர­லையை பின்­வ­ரும் யூடி­யூப் தளத்­தி­லும் https://youtu.be/SmwLrnwz5N0 ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் https://www.facebook.com/Muruganhilltemple பக்­தர்­கள் காண­லாம்.

மேலும் கு­ட­மு­ழுக்கு ­வி­ழா­வில் இட­நெருக்­க­டி­யைத் தவிர்ப்­ப­தற்­காக வாகன நிறுத்த வசதி செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் பக்­தர்­கள் பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­படுத்தி விழா­வுக்கு வரு­மா­றும் கோயில் நிர்­வா­கத்­தி­னர் கேட்­டுக்­கொள்­கின்­ற­னர்.