கண்ணதாசன் விழாவில் கவிஞர் முத்துலிங்கம்

கண்ணதாசன் விழாவில் கவிஞர் முத்துலிங்கம்

1 mins read
f069955a-3132-49ce-a9e5-49202df18e74
-
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 'கவியரசு கண்ணதாசன் விழா', வரும் 18ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு 'ஸூம்' வழியாக நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் பெட்ரோலியத் தொழிலின் ஐக்கியத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான திரு. கே. கார்த்திகேயன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கவியரசரின் சமகாலத்தவரும் மூத்த கவிஞர்களில் ஒருவருமான கவிஞர் முத்துலிங்கம் (படம்) சிறப்புரை ஆற்றுகிறார். கண்ணதாசன் விழாவை ஒட்டி 40 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்கு கண்ணதாசன் விருது வழங்கப்படும். எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட போட்டியின் முடிவுகள் விழாவில் அறிவிக்கப்படுவதுடன் முதல் பரிசு பெற்ற பாடல், இசையுடன் ஒலியேறும். கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியின் இறுதிச்சுற்றில் முதல் பரிசு பெற்றவர்களின் காணொளிகளும் இடம்பெறும். கண்ணதாசன் விழாவைக் காண விரும்புவோர், 864 2927 0476 'ஸூம்' இணைப்பில் (கடவுச்சொல் தேவையில்லை) இணையலாம், அல்லது http://youtube.com/singaporetamilwriters யூடியூப் நேரலையிலும் காணலாம்.