சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பாக நடந்தேறிய நவராத்திரி பெருவிழா

சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பாக நடந்தேறிய நவராத்திரி பெருவிழா

1 mins read
b29e77d1-9e6e-4e25-aaac-272fec5f8340
-
multi-img1 of 2
Google News Preferred Icon

நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில்கள் பலவற்றில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கொவிட்-19க்கு எதிரான கட்டுப்பாடுகளுக்கிடையே இம்மாதம் ஆறாம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உபய பூஜை, கலாசாரப் படைப்புகள் போன்றவற்றை நேரடியாக கோயில்களில் காண முடியாதவர்களுக்காக அவை இணையம் வழி ஒளிபரப்பப்பட்டன. (படங்களில்) ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் கோயில் (இடம்), ஸ்ரீ சிவ துர்கா கோயில் உட்பட பல கோயில்களில் நவராத்திரி சிறப்பு அம்சமாக கொலு வைக்கப்பட்டது. இறை வழிபாட்டுக்கு வந்திருந்த பலர், தங்களின் கைபேசியில் இச்சிறு பொம்மைகளைப் படம் எடுத்துக்கொண்டனர். மேலும் படங்கள் காண, தமிழ் முரசு இணையப்பக்கத்தை நாடவும். படங்கள்: திமத்தி டேவிட்