பணிப்பெண்களின் திறமைகளை அங்கீகரித்த ‘நிஜத்தின் நிழல்’

பணிப்பெண்களின் திறமைகளை அங்கீகரித்த ‘நிஜத்தின் நிழல்’

1 mins read
80aac120-5e4a-4b97-92cf-b84edec385f1
‘நிஜத்தின் நிழல்’ பங்கேற்பாளர்கள் நடனமாடினர். - படம்: ஆயிஷா ரோஸ்
Google News Preferred Icon

‘சிறகுகள்’ அமைப்பின் சார்பில் இல்லப் பணிப்பெண்களுக்காக ‘நிஜத்தின் நிழல்’ எனும் சிறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது.

பணிப்பெண்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களை அங்கீகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த முதல் முயற்சியில் 70க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், பணிப்பெண்களில் சிலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகளைப் பகிர்ந்துகொண்டனர். வேறு சிலர் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிப் பேசினர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரிஷ்ணா கூறுகையில், “எங்கள் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பணிப்பெண்கள் நடனம் கற்க விருப்பம் தெரிவித்தனர். அந்த வேண்டுகோளே இந்த நிகழ்ச்சியின் அடித்தளமாக அமைந்தது,” என்றார்.

‘நிஜத்தின் நிழல்’ பங்கேற்பாளர்கள்.
‘நிஜத்தின் நிழல்’ பங்கேற்பாளர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

சிறப்பு விருந்தினர் ஜெயசுதா சமுத்திரன் பேசுகையில், “குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கு வீட்டுப் பணியாளர்கள் கண்ணுக்குத் தெரியாத தூண்களாக விளங்குகின்றனர். இவர்கள் நிழலாக ஆதரவு தருவதால் தம்பதியர் வேலைக்குச் செல்ல முடிகிறது,” எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு ‘ஜென்டில்மேன் பார்பர்’ நிறுவனம் சார்பில் ‘வீட்டின் ராணி’ என்ற சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிறுவன உரிமையாளர் வெங்கடே‌‌ஷ் தனபால் கூறுகையில், “இது பணிப்பெண்களை அங்கீகரிப்பதற்கும் பாராட்டுவதற்குமான புதிய முயற்சி. இதற்கு ஆதரவளிப்பதற்காகப் பதக்கங்களை வழங்க எண்ணினேன்,” என்றார்.

ஆடல், இசையோடு மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி, தங்களுக்குப் புத்துணர்வை அளித்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

பங்கேற்பாளர்களும் நடனமாட ஊக்குவிக்கப்பட்டனர்.
பங்கேற்பாளர்களும் நடனமாட ஊக்குவிக்கப்பட்டனர். - படம்: ஆயிஷா ரோஸ்
நிஜத்தின் நிழல் பங்கேற்பாளர்கள் நடனமாடினர்.
நிஜத்தின் நிழல் பங்கேற்பாளர்கள் நடனமாடினர். - படம்: ஆயிஷா ரோஸ்
குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பணிப்பெண்பெண்கள்