சட்டம், நமக்காக! - நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் முக்கியத்துவம்

சட்டம், நமக்காக! - நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் முக்கியத்துவம்

1 mins read
சட்டங்களை எளிமையாக விவரிக்கும் புதிய காணொளித் தொடர்
d4f488e1-4476-4f55-b070-c14d74a0fe9f
சட்டங்களைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ள வகைசெய்வது ‘சட்டம், நமக்காக’ தொடரின் இலக்கு. - படம்: ஹானா லா ஃபர்ம்ஸ்
Google News Preferred Icon

பொதுவாக, சட்டம் என்றாலே நம்மில் பலருக்கு அதிகம் புரியாமல் இருக்கக்கூடும்.

சட்டங்கள் சிக்கலான, எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதப்படுகின்றன என்ற கருத்தும் உண்டு. அதேவேளை, பொதுமக்கள் சட்டங்களை நன்கு அறிந்திருப்பதும் முக்கியம்.

அப்படியிருக்கையில், சட்டங்களை நம் அனைவருக்கும் எளிதில் புரியவைக்கும் முயற்சிதான் தமிழ் முரசின் ‘சட்டம், நமக்காக!’ காணொளித் தொடர்.

கடந்த சனிக்கிழமை (மே 9) வெளியான முதல் பாகத்தில் வழக்கறிஞர் கந்தன் ராகவேந்திரா குடும்ப வன்முறைச் சம்பவங்களைப் பற்றிப் பேசினார். இவ்வாரம் வெளியாகும் இரண்டாம் பாகத்தில் ‘எல்பிஏ’ எனப்படும் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பற்றி விவரிக்கிறார் வழக்கறிஞர் திவ்யா நாயுடு.

நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் போன்ற விவரங்களை அவர் விளக்குகிறார். நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பற்றி சிலரிடையே இருக்கக்கூடிய தவறான கருத்துகளையும் அவர் எடுத்துச் சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சட்டம்வழக்கறிஞர்நீண்டகால அதிகாரப் பத்திரம்

தொடர்புடைய செய்திகள்