கவிமாலை அமைப்பின் காப்பாளராக இருந்த அமரர் மா. அன்பழகனின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சியாக அந்த அமைப்பின் அடுத்துவரும் மாதாந்தர நிகழ்ச்சி அமையவுள்ளது.
கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் அதன் மாதாந்தர நிகழ்ச்சி, ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையின்போது நடைபெறுகிறது.
சனிக்கிழமை (மே 30) மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி, தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘த போட்’ (The Pod) அறையில் நடைபெறவிருக்கிறது.
கவிமாலையில் கவிஞர் மு.பாலசுப்ரமணியன் தலைமையில் ‘புதுமைத்தேனீ’ என அழைக்கப்பட்ட அமரர் அன்பழகனின் புகழைப் போற்றும் கவியரங்கம் இடம்பெறவுள்ளது.
ந வீ விசயபாரதி, கி கோவிந்தராசு, கோ இளங்கோ, இறை மதியழகன், இளம்பரிதி, மு செ பிரகாஷ், சி கருணாகரசு, தீபக், சக்திதேவி ஆகியோர் இக்கவியரங்கில் கவிதை அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
கவிதைகள் வாசித்தல், பரிசளிப்பு ஆகிய வழக்கமான கவிமாலை அங்கங்கள் இடம்பெறும்.

