‘காதல் துதி’ கவிதை நூல் வெளியீடு

‘காதல் துதி’ கவிதை நூல் வெளியீடு

1 mins read
2a775bca-1683-4860-8d75-f42a2b5ec524
சனிக்கிழமை (நவம்பர் 29) இரவு 7 மணிக்கு ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் ‘காதல் துதி’ நூல் அறிமுகம் காண்கிறது. - படம்: பா.கங்கா
Google News Preferred Icon

பா.கங்கா எழுதிய ‘காதல் துதி’ கவிதை நூல் தொகுப்பு 21ஆம் நூற்றாண்டுக்கும் பக்தி இலக்கியக் காலகட்டத்திற்கும் இடையே ஒரு பாலமாக அமையும் கவிதை நூல்.

‘காதல் துதி’யின் நாயகி முழுமையாகச் சிவனிடம் காதல்கொண்டு தன் இணையாக இருக்க அழைக்கிறாள். இறுதியில் சிவனைத் தன் கவிதையில் கட்டுண்டு இருக்குமாறுப் பாடித் தன் கவிதையை முடிக்கிறாள்.

சனிக்கிழமை (நவம்பர் 29) இரவு 7 மணிக்கு எண் 31 மார்சிலிங் ரைசில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தின் இரண்டாவது தளத்தில் ‘காதல் துதி’ அறிமுகம் காணவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்