‘ஒரு போதும் நான் என் தந்தையின் மகளில்லை’ நூல் கலந்துரையாடல்

‘ஒரு போதும் நான் என் தந்தையின் மகளில்லை’ நூல் கலந்துரையாடல்

1 mins read
f55749b1-2067-4385-8e8c-aeabaf245e45
தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள பாசிபிலிட்டி அறையில் நிகழ்ச்சி நடைபெறும். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) மாலை 6 முதல் இரவு 8 மணிவரை ‘ஒரு போதும் நான் என் தந்தையின் மகளில்லை’ நூல் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாவது தளம், பாசிபிலிட்டி அறையில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நூல், எழுத்தாளர் பாமினி செல்லத்துரை ஆங்கிலத்தில் எழுதிய ‘நெவர் மை ஃபாதர்ஸ் டாட்டர்’ என்ற நாவலின் தமிழாக்கமாகும். 

மகள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை அவரின் தந்தையான முனைவர் சபா இராஜேந்திரன் தமிழில் மொழிபெயர்த்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன் நூலை அறிமுகம் செய்யவிருக்கிறார். கதைக்கள உறுப்பினர்கள் நூலை வாசித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். நூலாசிரியரும் அவரின் தந்தையும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

கலந்துரையாடலில் பங்கேற்று, போர் ஏற்படுத்திய வாழ்வியல் சிதைவுகள், மனித உறவுகளின் வலி, அடையாளத் தேடல், நம்பிக்கையின் பயணம் குறித்து வருகையாளர்கள் வாசிப்பு அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாலை 6 மணிக்குத் தேநீர் பரிமாறப்பட்ட பின் நிகழ்ச்சி தொடங்கும். இரவு 8 மணிக்கு வருகையாளர்களுக்கு இரவு உணவும் வழங்கப்படும்.

நூலை வாசித்து கலந்துரையாட விருப்பமுள்ளவர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். எண் 24 அப்பர் டிக்சன் சாலையில் உள்ள ஆர்யா கிரியேஷன்ஸ் கடையில் இந்நூல் கிடைக்கும். தொடர்புக்கு பிரேமா மகாலிங்கம் - 9169 6996.

குறிப்புச் சொற்கள்
தமிழ்மொழிமொழிபெயர்ப்புகலந்துரையாடல்